வெயில் தாக்கம்: ஒரே நிமிடத்தில் பேச்சை முடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது தொண்டர்கள் அதிருப்தி

வேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் இளஞ்செழியனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆம்பூருக்கு புதன்கிழமை வருகை தந்தார்.  ஆம்பூர் பைபாஸ் சாலையில் திறந்தவெளி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.   மேடைக்கு காலை சுமார் 10.10 மணிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகை தந்தார்.  முதலில் வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி. ஞானசேகரன் பேசினார்.  அவர் சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.
வெயில் தாக்கம்: ஒரே நிமிடத்தில் பேச்சை முடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது தொண்டர்கள் அதிருப்தி
Updated on
1 min read

ஆம்பூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரேயொரு நிமிடம் பேசியதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.

வேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் இளஞ்செழியனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆம்பூருக்கு புதன்கிழமை வருகை தந்தார்.  ஆம்பூர் பைபாஸ் சாலையில் திறந்தவெளி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.   மேடைக்கு காலை சுமார் 10.10 மணிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகை தந்தார்.  முதலில் வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி. ஞானசேகரன் பேசினார்.  அவர் சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.

திறந்த வெளி மேடையாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உணர்ந்தார்.  சி. ஞானசேகரன் பேசிய பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசத் தொடங்கினார்.  அனைவருக்கும் வணக்கம், நான் பேச நினத்ததையெல்லாம் ஞானசேகரன் பேசிவிட்டார்.  ஆகவே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறி ஒரே நிமிடத்தில் பேச்சை முடித்துக் கொண்டார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக மற்றும் அதிமுகவிற்கு எதிராக எப்பொழுதும் பரபரப்பாக ஏதேனும் விமர்சனம் செய்து கொண்ட இருப்பார்.  அவருடைய பேச்சு எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.  அதனால் அவருடைய பேச்சை கேட்க காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  ஆனால் அவர் ஒரே நிமிடம் மட்டுமே பேசியது தொண்டர்களை அதிருப்தி அடையச் செய்தது. பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உடன் வேட்பாளர் விஜய் இளஞ்செழியன், வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்கோபால், முன்னாள் மாவட்ட தலைவர் பாலூர் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் கே. குப்புசாமி, ஆம்பூர் நகர தலைவர் எஸ். மாணிக்கம், நகரமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, சுதாகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com