பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க குவிந்த மலைவாழைத்தார்கள்
பழனி மலைக்கோயிலின் முக்கிய பிரசாதமாக விளங்குவது பஞ்சாமிர்தம். முருகப்பெருமானுக்கு விருப்பமான இந்த பஞ்சாமிர்தம் தேன்,நெய், கரும்புசர்க்கரை, ஏலக்காய் மற்றும் மலைவாழைப்பழம்


பழனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்சாமிர்தம் கரைக்க டன் கணக்கில் வாழைத்தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோயிலின் முக்கிய பிரசாதமாக விளங்குவது பஞ்சாமிர்தம். முருகப்பெருமானுக்கு விருப்பமான இந்த பஞ்சாமிர்தம் தேன்,நெய், கரும்புசர்க்கரை, ஏலக்காய் மற்றும் மலைவாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மலைவாழைப்பழத்தால் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதோடு, அதிக சுவை கொண்டதாகவும் இருக்கும். இதனால் தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது பக்தர்கள் கூட்டம் அதிக அளவு மலைவாழைப்பழம் கொள்முதல் செய்து பஞ்சாமிர்தம் தயாரிக்கின்றனர்.
தற்போது பங்குனி உத்திர நாட்களில் நிலவும் கடும் வறட்சியாலும், சூறைக்காற்றாலும் வாழைமரங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதால் மலைவாழைப்பழத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் டன் கணக்கில் மலைவாழைப்பழங்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விற்பனையாளர் ஜாபருல்லா தெரிவித்ததாவது:
தற்போது கொடைக்கானல், குடகு, மைசூரு, சிறுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பழங்களை விற்பனைக்கு வரவழைத்துள்ளோம்.பழங்களின் அளவுக்கேற்ப விலை ரூ.4ல் இருந்து ரூ.6 வரை விற்கப்படுகிறது. பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வறட்சியிலும் விலை அதிகம் வைக்காமல் குறைந்த லாபத்திற்கே விற்கிறோம். 10நாள் திருவிழா வரை விற்பனை நடைபெறும் என்றார்.
இதுகுறித்து பக்தர் சக்திவேல் கூறும்போது, பஞ்சாமிர்தம் தயாரிக்க மலைவாழை முக்கியமானது. சுவை கூட்டும் என்பதாலும், சத்து அதிகம் என்பதாலும் இதையே நாங்கள் வாங்கி தயாரிக்கிறோம். விலை அதிகமாகும் போது தயாரிப்பை குறைத்துக் கொள்கிறோம்.ஆனால் மலைவாழையையே வாங்கிதான் பயன்படுத்துகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...