மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பிரச்சார வேனை மறித்து திமுகவினர் போராட்டம்

பொன்னேரியில் வாக்கு கேகரிக்க வந்த திருவள்ளூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேனை வழிமறித்து திமுகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை

News image
Updated On :11 ஏப்ரல் 2014, 12:31 pm

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

பொன்னேரியில் வாக்கு கேகரிக்க வந்த திருவள்ளூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேனை வழிமறித்து திமுகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கொடூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 10மணி அளவில் வேட்பாளர் ரவிக்குமார் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் முன்னால் அமைச்சர் க.சுந்தரம், திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம், மீஞ்சூர் ஒன்றிய பொருப்பாளர் சுகுமார், மீஞ்சூர் ஒன்றிய முன்னால் பொறுப்பாளர் பாஸ்கர் சுந்தரம் உள்ளிட்டோர் வேனில் இருந்தவாறு வாக்கு சேகரித்து வந்தனர்.

கொடூர், தடப்பெரும்பாக்கம், திருவேங்டபுரம் பகுதியில் (ஒரு சில இடங்களில் மட்டும்) பிரச்சாரத்தை முடித்து விட்டு வேன் வேண்பாக்கம் பகுதியில் வந்தது. திருவேங்கடபுரகம், பொன்நகர், கொக்குமேடு உள்ளிட்ட இடங்களுக்கு பிரச்சாரம் செய்ய வேட்பாளர் வருவார் என கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருந்தனர். வேட்பாளரை அழைத்து வந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டோர் மேற்கண்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லாமல் மாற்று பாதையில் அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து வேண்பாக்கம் பகுதியில் ரவிக்குமார் வந்தபோது தங்கள் பகுதிக்கு வராததால் அதிருப்தியில் இருந்த திமுக கட்சி தொண்டர்கள் சிலர் வேட்பாளர் வேனை மறித்து வேனில் இருந்தவர்களிடம் வாக்கு வாதம் செய்தனர்.

வேனில் இருந்த மாவட்ட பொருப்பாளர் சுதர்சனம், முன்னால் அமைச்சர் க.சுந்தரம் ஆகியோரும் கீழே நின்றிருந்தவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து வேண்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்காமல் வேட்பாளர் ரவிக்குமார் சென்றார். குழு மோதல் காரணமாக மீஞ்சூர் ஒன்றிய திமுக பொருப்பாளர் சுகுமாறன்,  முன்னால் பொருப்பாளர் பாஸ்கர்சுந்தரம் என இரண்டு அணிகளாக அப்பகுதியில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். இதில் பாஸ்கர்சுந்தரத்தின் ஆதரவாளர்கள் இருந்த பகுதிக்கு வேட்பாளர் அழைத்து செல்லப்படாததால் வேன் மறிப்பு சம்பவம் நடைபெற்றதாக கட்சி தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.