விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஓட்டியுள்ள காப்புக் காட்டில் பயங்கர தீ எரிந்து கொண்டுள்ளது. இதனை அணைக்க இரு நாட்களாகும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத் தொடர்ச்சி மலையில் மம்சாபுரத்திற்கு மேற்கே, விரியன்கோயில் பீட் பகுதியில் உள்ள காப்புக் காட்டின் உயரமான மலை உச்சியில் வெள்ளிக்கிழமை மாலை தீ எரிவது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் உத்தரவின் பேரில் சுமார் 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தத் தீ எரிவது, சுமார் 60 கி.மீ. தூரம் வரை இரவு தெரிந்தது.
இப் பகுதிக்கு ஆடு மேய்க்கச் செல்லுவோர் தீயை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது மிகவும் உயரமான மலை உச்சி என்பதால் தீயை அணைக்க சனிக்கிழமை இரவு ஆகும் என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் கூறுகையில், இரு வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
முழுவீச்சில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ எப்போது அணைத்து முடிக்கப்படும் என்பதை கூற இயலாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

