வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாளை பகுதியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரம், பாளையங்கோட்டை, தியாகராஜநகர், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம், குறிச்சி, குலவணிகர்புரம் பகுதியில் திறந்த ஜீப்பில்

News image
Updated On :13 ஏப்ரல் 2014, 12:07 pm

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டை, பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குசேகரித்தனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரம், பாளையங்கோட்டை, தியாகராஜநகர், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம், குறிச்சி, குலவணிகர்புரம் பகுதியில் திறந்த ஜீப்பில் வாக்குசேகரித்தார்.பிரசாரத்தில் டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் மு. அப்துல்வஹாப், பகுதிச் செயலர் வி.எஸ்.டி. சாகுல்ஹமீது, மாநகர இளைஞரணிச் செயலர் எஸ்.வி. சுரேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பா. அருண்குமார், மாநகர மாணவரணிச் செயலர் பால்மாயாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் வின்சர், ரா. ராஜகுமாரி, மாநகர துணைச் செயலர் ரேவதிஅசோக், இளைஞரணி துணை அமைப்பாளர் கந்தசாமி, முன்னாள் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் பிரசாரம்:

காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு, வண்ணார்பேட்டை, சமாதானபுரம், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம் பகுதியில் வாக்குசேகரித்தார். வேட்பாளருடன் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கே. ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், தேசிய கப்பல்துறை ஆலோசனைக்குழ உறுப்பினர் அ. அமீர்கான், மாநகராட்சி உறுப்பினர் உமாபதிசிவன், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சிந்தாசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, டி.கே. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.