வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: மீட்பு பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரியில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை திங்கள்கிழமை தவறி விழுந்தது. சுமார் 10 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை உயிருடன் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 7:13 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரியில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை திங்கள்கிழமை தவறி விழுந்தது. சுமார் 10 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை உயிருடன் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரியை சேர்ந்தவர் கணேசன் (53). விவசாயி. கணேசன் தனக்கு சொந்தமா 6 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தோட்டத்தில் விவசாயத் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

திங்கள்கிழமை அங்கு மோட்டார் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கணேசன் இரண்டரை வயது மகன் ஹர்சன், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்த தீயணைப்புபடையினர் விரைந்து வந்து கிணற்றில் சுமார் 10 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தை சிக்கியுள்ள கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி அமைத்து ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.