நெல்லை மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணியை தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன்


திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணியை தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன் பாளையங்கோட்டையில் பார்வையிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. ஒவ்வொரு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணியாளர்கள் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.இப்பணி வரும் 20 ஆம் தேதி வரை களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்குவார்கள். வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டதற்காக அத்தாட்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2707 வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு்ள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுவார்கள்.
பூத் சிலிப் பெறாத வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அதையும் தவற விட்ட வாக்காளர்கள் ஏப். 24 ஆம் தேதி வாக்குப்பதிவு மையங்களில் காலை 6 மணி முதல் வாக்காளர்கள் பூத் சிலிப் பெற்றுக் கொள்ளளலாம் என அறிவிக்கப்பட்டு்ள்ளது.
பாளையங்கோட்டையில் 24 ஆவது வார்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியினை தேர்தல் அலுவரும், ஆட்சியருமான மு. கருணாகரன் பார்வையிட்டார். அவருடன் உதவி தேர்தல் அலுவலர் அர. லட்சுமி, உதவி ஆணையர் பெருமாள், வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயகம், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...