வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் 604 பதற்றமான வாக்குச்சாவடிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர். திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 2707 வாக்குச் சாவடிகலில் 604 வாக்குச்சாவடிகள்

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 1:04 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 401 மையங்களில் 604 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர். திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 2707 வாக்குச் சாவடிகலில் 604 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறப்பு பயிற்சி: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வரும் ஏப். 16 ஆம் தேதி முதல் கட்ட சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி சங்கரன்கோவில் தொகுதியில் சங்கரன்கோவிலில் உள்ள ஸ்ரீகோமதி அம்பாள் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் தொகுதியில் புளியங்குடியில் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் தொகுதியில் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

தென்காசி தொகுதியில் தென்காசி மஞ்சம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆலங்குளம் தொகுதியில் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும், திருநெல்வேலி தொகுதியில் திருநெல்வேலி காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியிலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,பாளையங்கோட்டை தொகுதியில் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியிலும், நான்குனேரி தொகுதியில் நான்குனேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ராதாபுரம் தொகுதியில் வள்ளியூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.