காட்டுமன்னார்கோயில் அருகே சிறுவன் கொலை: குற்றவாளியை கைது செய்யக் கோரி சாலைமறியல்
காட்டுமன்னார்கோயில் அருகே 6 வயது படிக்கும் 11 வயது சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். கொலை குற்றவாளியை கைது செய்ய


காட்டுமன்னார்கோயில் அருகே 6 வயது படிக்கும் 11 வயது சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். கொலை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்களும், உறவினர்களும் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த தங்கதுரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மாலா தனது குழந்தைகளுடன் காட்டுமன்னார்கோயில் அருகே பாப்பான்தோப்பு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக தங்கியுள்ளார். இவர்களுக்கு தமிழ்வேலவன் என்ற மகனும், தமிழ்ச்செல்வி, தமிழரசி என்ற மகள்களும் உள்ளனர். மகன் தமிழ்வேலவன் (11) காட்டுமன்னார்கோயில் அருகே அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் தமிழ்வேலவன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிற்கு அருகாமையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள சவுக்கு தோப்பில் கழுத்து அறுபட்ட நிலையில் தமிழ்வேலவன் இறந்து கிடந்தார்.
சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பழஞ்சநல்லூர்-குடிகாடு சாலையில் பாவான்தோப்பு பஸ்நிறுத்தம் அருகே அப்பகுதி மக்களும், உறவினர்களும் திங்கள்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேஸ்இருதயராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்த மறியலை வாபஸ் பெற்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...