வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை, தென்காசி தொகுதிகளில் 5684 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஏப். 17 ல் வேட்பாளர், சின்னம் பொருத்தம்

ஆட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவில் செவ்வாய்க்கிழமை ரேண்டம் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.

News image
Updated On :15 ஏப்ரல் 2014, 10:59 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் 2707 வாக்குச்சாவடிகளுக்கு 5684 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவில் செவ்வாய்க்கிழமை ரேண்டம் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன், இதனை தொடங்கி வைத்தார். தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் பி. உமாமகேஷ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாமுவேல், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் எஸ். பால்துரை, மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். வாக்குப்பதிவின் போது மின்னணு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதனை  சமாளிக்கும் வகையில் 5 சதவிகிதம் கூடுதலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

ஏப். 17 ஆம் தேதி மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தப்படுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரசு பொறியியல் கல்லூரியில் வைத்தும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வைத்தும் பொருத்தப்படுகிறது.இவ்விருத் தொகுதிகளிலும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை இருப்பதால் பிற மாவட்டங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு 1,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகளும், நான்குனேரி தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 267 வாக்குச்சாவடிகளும், திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் 234 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 1617 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தென்காசி மக்களவைத் தொகுதியில் தென்காசி பேரவைத் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளும், கடையநல்லூர் தொகுதியில் 281 வாக்குச்சாவடிகளும், வாசுதேவநல்லூர் பேரவைத் தொகுதியில் 252 வாக்குச்சாவடிகளும், சங்கரன்கோவில் பேரவைத் தொகுதியில் 253 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இத்தொகுதியில் 1090 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இத்தொகுதியில் உள்ள ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 237 வாக்குச்சாவடிகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு்ள்ளன. இவ்விரு தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.