நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டீக்கடை மோடி பிரதமரானால் கோயில்களை தகர்ப்போம்: த.மு.க பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களில் குண்டு வைக்கப்படும் என்ற மிரட்டலுடன், த.மு.க. என்று பெயரிடப்பட்டுள்ள மொட்டைக் கடிதம் ஒன்று வந்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2014, 9:22 am

சரவண பெருமாள்

டீக்கடை மோடி பிரதமர் ஆனால், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களில் குண்டு வைக்கப்படும் என்ற மிரட்டலுடன், த.மு.க. என்று பெயரிடப்பட்டுள் மொட்டைக் கடிதம் வந்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்த கடிதத்தில், டீக்கடை மோடி பிரதமரானால், அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில், மேல்மருவத்தூர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள பல முக்கியக் கோயில்களை வெடி வைத்து தகர்ப்போம் என்று இப்படிக்கு பிலால் மாலிக் என்று பெயரிடப்பட்டு அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் குறித்து கோயிலின் இணை ஆணையர் திருமகள், நகர காவல்நிலையத்தில் இன்று புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயிலுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் கோயிலில் சோதனை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.