/

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: பக்த திருக்கூட்டத்தார் முருகர், வெள்ளிவேலுக்கு சிறப்பு பூஜை செய்தனர்

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம்

News image
Updated On :16 ஏப்ரல் 2014, 1:16 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

     பழனி பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற்ற நிலையிலும் பழனியாண்டவருக்கு கொடுமுடி தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.  புதன்கிழமை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து சேர்ந்தனர். திருப்பூர் மாவட்டம் அக்கரைப்பாளையம், சேர்வகாரன்பாளையம், உத்தமபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்

84ம் ஆண்டு அபிஷேக நிகழ்ச்சியாக கடந்த 10ம் தேதி மகநட்சத்திரத்தில் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் முத்தரித்து பாதயாத்திரையாக புதன்கிழமை பழனி அருகே புளியம்பட்டியை வந்தடைந்தனர்.

 வழிநெடுக அன்னதானம் செய்து வந்த பக்த திருக்கூட்டத்தினர் தனியார் ஆலை வளாகத்தில் உடன் கொண்டு வந்திருந்த ஐம்பொன்னாலான முருகர், கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளிவேலுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்தனர். 

பால், பஞ்சாமிர்தம், சந்தனம், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடஷ உபச்சாரம் செய்யப்பட்டது.  பூஜைகளை பூசாரி நடராஜ் செய்தார்.  தீபாராதனையைத் தொடர்ந்து பஜனைப்பாடல்கள் பாடப்பட்டது. 

திருக்கூட்டத்தார் இரவு கிரிவீதி சுற்றி தங்கிவிட்டு வியாழக்கிழமை காலை மலைக்கோயிலில் விசாக நட்சத்திரத்தில் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்குகின்றனர்.  பூஜைக்கான ஏற்பாடுகளை பக்த திருக்கூட்டத்தார் சார்பில் தலைவர் சுப்ரமண்யம், செயலாளர் சிதம்பரம் என்ற மோகன், உப தலைவர் சென்னை முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.