அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே கொத்தனார் வீட்டில் 22 சவரன் நகை திருட்டு

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் தங்கநகையை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Updated On :16 ஏப்ரல் 2014, 11:32 am

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் தங்கநகையை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே காவலூரைச் சேர்ந்தவர் கொத்தனார் ஜோசப்(40). இவரது மனைவி அருகில் தீப்பெட்டி ஆலையில் வேலைக்குச் சென்றாராம். அதனால் செவ்வாய்கிழமை வீட்டை பூட்டி விட்டு கதவு மேல் வைத்து விட்டு சொந்த வேலையின் காரணமாக சென்றுள்ளார். அதையடுத்து, மாலையில் மனைவி வேலை விட்டு வருவதற்கு முன்பாக வீட்டிற்கு வந்தார். அப்போது, வீடு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் திறந்திருந்தது. அதிலிருந்த 24 சவரன் நகையையும் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

 உடனே இது தொடர்பாக ஜோசப் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.