ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சடலமாக மீட்பு
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அருகே கிட்டாம்பாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை 25 மணி நேரத்திற்கு


திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் துளை போடப்பட்டு குழந்தை சுஜித் இன்று மாலை 5.35 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டான்.
நேற்று மாலை 4 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில், இரவு 8 மணிக்கே குழந்தை இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிபடுத்திவிட்டனர்.
எனினும், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகிவிடக் கூடாது என்பதால் அதனை பொதுமக்களுக்கு அறிவிக்கவில்லை.
குழந்தை விழுந்த குழிக்குள் மண் மூடிக் கொண்டதால், நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் ஆக்ஸிஜன் செலுத்துவதையும் நிறுத்திவிட்டனர்.
இந்த நிலையில், மதுரை , கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்த சிறப்பு மீட்புக் குழு நேற்று இரவு 12 மணி முதல், இன்று காலை 8 மணி வரை அவர்களுக்குரிய பாணியில் குழந்தையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் அவர்களது எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன. 8 மணிக்கு மேல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் முயற்சியும், 11 மணிக்கு மேல் தோட்டாக்கள் வைத்து பள்ளம் தோண்டும் பணியும் நடந்தது.
48வது அடியில் குழந்தை சிக்கியிருக்கும் நிலையில், 35 அடி வரை ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு பாறை இருந்ததால், 4 முறை தோட்டக்களை வெடிக்க வைத்து பள்ளம் தோண்டப்பட்டு குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான்.
குழந்தையின் உடலைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டதால் பதற்றத்தைத் தணிக்க குழந்தையின் சடலத்தை உடனடியாக காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக போளூர் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையை மீட்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் பணி நடைபெற்று வருகிறது.
குழந்தை இறந்த நிலையில் மீட்கப்படும் போது அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காக, மாவட்ட ஆட்சியர், மீட்கப்படும் முன்பே, குழந்தை இறந்து விட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...