வாக்காளர்களுக்கு கை சின்னம் பொறித்த கடிகாரங்களை காங்கிரஸ் கட்சியினர் வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தான் பிரதமர் வேட்பாளர் என்பதை மறந்துவிட்டு நாலாந்தர பேச்சாளர் போல மோடி பேசி வருகிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை குறித்து எதுவும் இல்லை. ஆனால், ராமநாதபுரத்தில் நின்று கொண்டு மீனவர்களின் நலனைக் காப்பேன் என்கிறார். ராகுல் காந்தியையும் இழிவுப்படுத்தி பேசி வருகிறார்.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பொருளாதார சிக்கலில் தவிக்கும்போது, காங்கிரஸ் கட்சியினர் வீடுதோறும் கை சின்னம் பொறிக்கப்பட்ட கடிகாரங்களை விநியோகிப்பதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கான ஆதாரங்களை அவர் அளிக்க வேண்டும். இல்லையெனில் பிரசாரத்தின்போது உண்மைக்கு மாறாகப் பேசி வருகிறார் என அவர் மீது வழக்கு தொடருவோம். வாக்களிக்க பணம் தருவதும், இலவசப் பொருள்கள் தருவதும் காங்கிரஸ் கலாசாரம் அல்ல. பணத்தை தண்ணீராக செலவு செய்வது காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
காமராஜர் பிறந்த மண்ணில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


