ராஜலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராதாகிருஷ்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறைச்சாலை அருகே வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாக அறிந்து சென்றுள்ளார். ராதாகிருஷ்ணன் அனுமதியின்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததுடன், டாக்டர் கிருஷ்ணசாமி குறித்து தனி நபர் விமர்சனம் செய்து துண்டுப் பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தாராம். இதனை ராஜலிங்கம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு ராஜலிங்கத்தை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார்களாம். இது குறித்து ராஜலிங்கம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் திலகராணி, வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் இரு கார் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.