நெல்லையில் தலை துண்டித்து இளைஞர் கொலை: சடலம் கிணற்றில் வீச்சு
திருநெல்வேலி தச்சநல்லூரில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த மர்மகும்பல், சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றுள்ளது.


திருநெல்வேலி தச்சநல்லூரில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த மர்மகும்பல், சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றுள்ளது.
திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள நல்மேய்ப்பர் நகரில் பாழடைந்த கிணற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து தச்சநல்லூர் போலீஸாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். தலை நீரில் மூழ்கி கிணற்றின் அடியில் கிடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. பல மணி நேர தேடுதல் வேட்டையில் தலையும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர்குளத்தைச் சேர்ந்த ஜம்புலிங்கம் மகன் மாயகிருஷ்ணன் (24) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதாம். அந்த வழக்குகளில் தொடர்புடைய யாரேனும் மாயகிருஷ்ணனை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...