தேமுதிக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியும் வேஸ்ட்; அதிமுக பெஸ்ட் : ஸ்ரீதர் வாண்டையார் பிரசாரம்
பழனியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம் மேற்கொண்டார்.


பழனியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் உதயக்குமாருக்கு ஆதரவு கோரி பழனியில் பல்வேறு நட்சத்திர நடிகை, நடிகர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் பழனியில் சிவகிரிப்பட்டி, பாலசமுத்திரம், குரும்பபட்டி மற்றும் பொருந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் ஸ்ரீதர்வாண்டையார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பழனி தேவர்சிலைக்கு மாலையணிவித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்ரீதர்வாண்டையார் பேசியதாவது, தமிழகத்தில் தேவர்திருமகனார் சிலைக்கு சுமார் நான்கு கோடி மதிப்பில் தங்கக்கவசம் வழங்கி தேவர் பெருமகனாருக்கு பெருமை சேர்த்தவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆவார்.
இதற்காக குருபூஜை இல்லாத நாளில் பல்வேறு இனமக்கள் பலரையும் இலட்சக்கணக்கில் அழைத்து வந்த பெருமை அவரை சேரும். மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி என பலரையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் நினைத்தால் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஓரிரு மணி நேரத்தில் செய்திருக்கலாம்.
தமிழகத்தில் விஜயகாந்த் கட்சியாகட்டும், திமுக ஆட்சியாகட்டும், காங்கிரஸ் கட்சியாகட்டும் அனைத்து கட்சியும் வேஸ்ட். அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே சிறந்த நிர்வாக திறன் உள்ளது. பிரதமராக தகுதியானவர் அவரே என பேசினார். பிரச்சாரத்தின் போது எம்எல்ஏ., வேணுகோபாலு, மூவேந்தர் முன்னேற்ற கழக பொது செயலாளர் செல்வராஜ், தொடர்பாளர் சிவக்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தாமரைக்குளம் குமார், முன்னாள் எம்எல்ஏ., வேணுகோபாலு, பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் ரவிக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் பிரேமாசக்திவேல், அரிமா சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...