வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லையில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலியில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஏப்ரல் 2014, 2:01 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூாரியில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு. கருணாகரன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் அடங்கிய 10 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 401 மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியினை கண்காணிக்க வங்கிகள், வருமானவரித்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் மத்திய அரசு பணியாளர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு்ள்ளது.

நுண் பார்வையாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு, செயல்முறை, வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் அசாதாரண சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்து பொதுப் பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தேர்தல் பொதுபார்வையாளர்கள் மனோஜ்குமார் (திருநெல்வேலி), விவேக்பிரதாப்சிங் (தென்காசி), தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் பி. உமாமகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் என். சாமுவேல், ஹரிஸ், உதவி தேர்தல் அலுவலர் க. சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், தேர்தல் வட்டாட்சியர் எஸ். பால்துரை, வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயகம் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.