வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு

விக்கிரமசி்ங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தனர்.

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 8:00 am

ஷேக் அப்துல்காதர்

விக்கிரமசி்ங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளில் வாக்குசேகரித்தார். வேட்பாளருடன் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலரும், வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையாபாண்டியன், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. எம். சக்திவேல்முருகன், நகராட்சி துணைத் தலைவர் தி. கணேசபெருமாள், சிவந்திபுரம் ஊராட்சித் துணைத் தலைவர் பா. பிராங்க்ளின், நகர செயலர் த. அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு, மூலச்சி, பொட்டல் ஊராட்சி பகுதி, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் வாக்குசேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும். காங்கிரஸ் கட்சியால்தான் மத்தியில் நிலையான ஆட்சியை தர முடியும். கிராம மக்களுக்கு 100 நாட்கள் வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உறுதி செய்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார் அவர். பிரசாரத்தில் கல்லிடைக்குறிச்சி நகரத் தலைவர் கே. கைக்கொண்டான், முன்னாள் தலைவர் கே. லட்சுமணன், சு. கிருஷ்ணன், நூர்முகம்மது, கே.எஸ்.ஏ. ஹமீது, மு. இசக்கி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் உலகநாதன், முருகன், பிச்சையா, பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.