ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கல்வீச்சு: ஒரு போலீஸார் உள்பட மூவர் காயம்: புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார் மீது புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸார் காயம் அடைந்தார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 2:47 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார் மீது புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸார் காயம் அடைந்தார்.

 மற்றொரு சம்பவத்தில் ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் இருவர் காயம் அடைந்தனர்.தென்காசி தனித் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வசந்தி முருகேசனை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். பல்வேறு இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அவருக்கு கிராமங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோட்டைப்பட்டியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஜான்பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று மேலும் பல இடங்களுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். கோட்டைப்பட்டி ஆதிதிராவிடர் விடுதி அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிறப்பு சார்பு ஆய்வாளர் காசியம்மாள் தலைமைக் காவலர் சப்பாணி உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு ஒரு கும்பலாக வந்த புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமராஜ், ஜான்பாண்டியனுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸாரை அடிச்சுக் கொல்லுங்கடா என்று ஆபாசமாகப் பேசினாராம். அப்போது கும்பல் கல் மற்றும் கம்பால் தலைமைக் காவலர் சப்பாணியை வழிமறித்து தாக்கி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளது.

இதில் காயம் அடைந்த தலைமைக் காவலர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் சப்பாணி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமராஜ், கோ.கோபால்சாமி, ரா.முத்துகிருஷ்ணன், மா.மூக்கையா, ச.கருப்பையா, கா.ராஜூவ்காந்தி, சி.ராஜ்குமார் மற்றும் பலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இருவர் காயம்:தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் கோட்டைப்பட்டியில் பிரச்சாரம் செய்துவிட்டு சென்ற பின்னர், இதே கட்சியைச் சேர்ந்த கோட்டைப்பட்டி தமிழன் மகன் முத்துக்குமார் (32), செங்குளம் காமாட்சி மகன் இந்திரஜித்பாண்டி (15) ஆகியோர் ஆதிதிராவிடர் விடுதி வழியே நடந்து வந்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமராஜ் தலைமையில் வந்த கும்பல் இருவரையும் வழி மறித்து ஆபாசமாகப் பேசி கை மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாம். இதில் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக முத்துக்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமராஜ் உள்ளிட்ட பலரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.