வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காங்கிரஸ், பாஜக கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சுப. உதயகுமார்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மை.பா. ஜேசுராஜை ஆதரித்து, கன்னியாகுமரியில் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும்

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 2:31 pm

ஷேக் அப்துல்காதர்

அதிமுக, திமுக கட்சிகள் மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என சுப. உதயகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மை.பா. ஜேசுராஜை ஆதரித்து, கன்னியாகுமரியில் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் சக்தி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப. உதயகுமார், ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.

பேட்டை, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, கொக்கிரகுளம், மேலப்பாளையம், குலவணிகர்புரம், பாளையங்கோட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு அவர் பிரசாரம் செய்தார். அப்போது உதயகுமார் பேசியதாவது: நாட்டில் மக்கள் வரிப்பணம் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் சுரண்டப்படுகிறது. இயற்கை வளங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வளம் பெறுகின்றன.

தமிழகத்தில் அதிமுக, திமுக மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. அவர்களை வளப்படுத்தி கொள்கிறார்கள். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வரவில்லை. மின்தடையை 3 மாதங்களில் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்கள். 3 வருடமாகியும் மின்சாரம் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட இனம், மொழி சார்ந்த மக்கள் வாழும் மதசார்பற்ற நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டேவிட்பருண்குமார், திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோசப்சகாயராஜ், துணை தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சி.எம். ராகவன், தேர்தல் பணிக்குழு செயலர் ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.