நெல்லை: தேர்தல் பயிற்சி மையத்தில் ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் குறித்த பயிற்சி மையத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேர்தல் பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில்


திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் குறித்த பயிற்சி மையத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேர்தல் பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3 ஆம் கட்டப்பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திருநெல்வேலி பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூாரியில் வைத்தும், பாளையங்கோட்டை தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வைத்தும் நடைபெற்றது.அந்தந்த பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அந்தந்த தொகுதியில் உள்ள மையத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பயிற்சி நடைபெற்ற சில மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முற்பகலில் நியமன ஆணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே வண்ணார்பேட்டை கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேர்தல் பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்து பயிற்சி மையத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களிடம் பாளையங்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் அருணாசலம், பேச்சுவார்த்தை நடத்தினார். அரை மணி நேரத்தில் பணி நியமனம் ஆணை வழங்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...