ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்கிழமை வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படை அலுவலர் பாபுசந்திரபிரகாஷிற்கு தகவல் வந்தது. இதன் பேரில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற போது அங்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த சிலர் ஓடிவிட்டனர். படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி மன்ற அ.தி.மு.க. உறுப்பினர் சிவசுப்பிரமணியன் (படம்) என்பவரை பறக்கும் படையினர் கைது செய்து வன்னியம்பட்டி காவல் நிலையம் கொண்டு வந்தனர். இவரிடம் இருந்த பணம் ரூ.1,60,200 பறிமுதல் செய்யப்பட்டது.