/

கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை: மனைவி-மகன் கைது

தூத்துக்குடி 3-வது மைல் ஜெஜெநகரைச் சேர்ந்தவர் சேகர் (46). கட்டடத் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் கொண்ட சேகர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து  வந்தாராம். வேலைக்கும் சரியாக

News image
Updated On :23 ஏப்ரல் 2014, 11:05 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் குடிபோதையில் தகராறு செய்த கட்டடத் தொழிலாளியை செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்ததாக அவரது மனைவி மற்றும் மகனை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி 3-வது மைல் ஜெஜெநகரைச் சேர்ந்தவர் சேகர் (46). கட்டடத் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் கொண்ட சேகர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து  வந்தாராம். வேலைக்கும் சரியாக செல்லாமல் இருந்து வந்ததால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வீட்டில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, சேகரின் மனைவி சகாயலதாவும், மகன் அஜீத்தும் சேர்ந்து உருட்டுக் கட்டையால் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சேகர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதற்கிடையே,  சேகரின் சடலத்தை போலீஸாருக்கு தெரியாமல் புதன்கிழமை அடக்கம் செய்ய முயன்றனராம். தகவலறிந்ததும் சம்பவ இடத்துகக்குச் சென்ற தென்பாகம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக சேகரின் மனைவி சகாயலதா, மகன் அஜீத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.