திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாக்காளர் பட்டியலில் சிவகங்கை இளைய மன்னரின் பெயர் நீக்கம்

விடுதலை போராட்ட வரலாற்றில் சிவகங்கை சீமையின் பங்கு கல் எழுத்துக்களில் பதிக்கப்படக் கூடியது. ஆங்கிலேயரிடம் நாட்டை இழந்த மன்னர்கள் பலர். அப்படி இழந்த நாட்டை மீட்ட ஒரே அரசி சிவகங்கையின்

Updated On :23 ஏப்ரல் 2014, 10:25 am

வாக்காளர் பெயர் பட்டியலில் சிவகங்கை இளைய மன்னரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

விடுதலை போராட்ட வரலாற்றில் சிவகங்கை சீமையின் பங்கு கல் எழுத்துக்களில் பதிக்கப்படக் கூடியது. ஆங்கிலேயரிடம் நாட்டை இழந்த மன்னர்கள் பலர். அப்படி இழந்த நாட்டை மீட்ட ஒரே அரசி சிவகங்கையின் வேலு நாச்சியார் மட்டுமே. இந்த ராஜ வம்சத்தினர் தற்போது சிவகங்கையின் அரண்மனையில் வாழ்ந்து வருகின்றனர்.சிவகங்கை நகராட்சி 9ஆவது வார்டு பகுதியில் சிவகங்கை அரண்மனை உள்ளது. இளைய மன்னர் என்ற பட்டத்துடன்  மகேஷ்துரை உள்ளார். 2004, 2009 மக்களவைத் தேர்தலிலும், 2006, 2001 சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மகேஷ்துரை வாக்களித்துள்ளார்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருந்து வந்துள்ளது. அரச பரம்பரையில் வந்தவராக இருந்தாலும், மக்களாட்சியை மதிக்கும வகையில் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சிவகங்கை சமஸ்தானத்தின் ராணியாருக்கு தேர்தல் ஆணையத்தின் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் சமஸ்தானத்தின் இளைய மன்னர் மகேஷ்துரைக்கும்,அவரது இளையராணிக்கும் பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்த போது இருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. வி.ஐ.பி. அந்தஸ்தில் உள்ள இவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டு விட்ட மக்களாட்சியில் தற்போது அவர்களுக்கு வாக்குரிமையும் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் முடிந்த பின்னர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக தினமணிக்கு அளித்த பேட்டியில் இளையமன்னர் மகேஷ்துரை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.