தேர்தல் பணி தொடர்பாக வாக்குச் சாவடிக்கு வந்த ஆசிரியர்கள் சிலருக்கு தேர்தல் பணிச் சான்றிதழ் (Election Duty Certificate) வழங்காததால் பணிக்கு வந்த ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்களவைக்கான பொதுத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், துணை நிலை ராணுவத்தினை தேர்தல் ஆணையம் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.ஒரு மக்களவைத் தொகுதியிலிருந்து வேறு ஒரு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக செல்பவர்கள் தபால் ஓட்டு (Postal Vote) வழங்கப்படும். ஒரு மக்களவைத் தொகுதிக்குள்பட்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு எந்த சட்டமன்றத் தொகுதியில், எந்த வாக்குச் சாவடியில் அவர்கள் தேர்தல் பணியினை மேற்கொள்கிறார்களோ அவர்கள் அந்த வாக்குச் சாவடியிலேயே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தங்களது வாக்கினை செலுத்த முடியும். இதற்கானச் சான்று தான் தேர்தல் பணிச் சான்று.
புதன்கிழமை பிற்பகலில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்தல் பணிக்காக சிவகங்கை மக்களவைத் தொகுதியின் வெவ்வேறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து வந்த ஆசிரியர்கள் பலருக்கு இந்தச் சான்று வழங்கப்படவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் சான்றிதழ் கிடைக்காத ஆசிரியர்கள் கூறியதாவது:-
வாக்களிப்பதன் கடமை மற்றும் அவசியத்தை வலியுறுத்தி புதிய வாக்காளர்களான மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி படிவத்தை வழங்கி, அதில் கையெழுத்து பெற்றுள்ளோம். ஜனநாயகக் கடமையை வலியுறுத்தும் எங்களில் சிலருக்கே வாக்களிக்க மறுக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது குறித்து தேர்தல் தொடர்பான அலுவலர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
தேர்தல் பணிக்காக வந்த அலுவலர்கள் வாக்களிக்க வகை செய்யும் சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து தேர்தல் தொடர்பான அலுவலர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
தேர்தல் பணிக்கு வந்த அலுவலர்கள் சிலரின் சான்றிதழ்கள் வேறு சாவடிக்கு மாறிச் செல்ல வாய்ப்பு உள்ளது. யார் யாருக்கு இது போன்ற சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற பெயர் பணிக்கு வந்த அலுவலர்களிடம் கேட்டு அவை குறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியினை கவனிக்க வரும் மண்டல அலுவலரிடம் இது குறித்து தெரிவித்து சான்றிதழ் கிடைக்க உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வியாழக்கிழமை மாலை தேர்தல் முடிவதற்குள் இந்த சான்றிதழ் கிடைக்காவிட்டால் தேர்ல் பணிக்கு வந்த அலுவலர்களால் வாக்களிக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

