நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்களித்த வேட்பாளர்கள்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், வேட்பாளருமான தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 11:01 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை வாக்களித்தனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், வேட்பாளருமான தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

சிதம்பரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், கடலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் சுதாமணிரத்தினம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

கடலூர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.