தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியோர்
நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தை காண முடிந்தது.18 வயதை பூர்த்தியடைந்த இளம் புதிய வாக்காளர்கள் ஆர்முடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.தேர்தலின்போது, பல்வேறு


மக்களவைத் தேர்தலில் தங்களது வாக்குரிமையை நிறைவேற்றும் வகையில் தள்ளதாத வயதிலும் துணையுடன் வந்து 90 வயதை கடந்த வாக்காளர்கள் வாக்களித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2707 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணிக்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில்
நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தை காண முடிந்தது.18 வயதை பூர்த்தியடைந்த இளம் புதிய வாக்காளர்கள் ஆர்முடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.தேர்தலின்போது, பல்வேறு காரணங்களால் தங்களது வாக்கை பதிவு செய்ய முடியாதவர்களும் உண்டு. ஆனால் 90 வயதை கடந்த நிலையிலும் முதியவர்கள் துணையுடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
பாளையங்கோட்டை சாந்திநகரில் தனது மகன் துணையுடன் பொன்னம்மாள் (86) என்பவர் வாக்களித்தார். மேலப்பாளையத்தில் 90 வயது மூதாட்டி ஜமீலா என்பவர் தனது மகன் உதவியுடன் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்ளித்தார்.பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் பேத்தி துணையுடன் கோமதியம்மாள் (84) என்பவர் புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாக்காளர்கள் குடையுடன் வந்து வாக்களித்தனர். முதுமை காரணமாக நடக்க முடியாத நிலையில் வாகனங்கள், சக்கர நாற்காலியில் வந்து முதியோர் வாக்களித்து சென்றதை காணமுடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...