ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு சீல் வைப்பு

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அனைத்து தனியார் நிறுவனங்களும் வியாழக்கிழமை

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 9:33 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி வியாழக்கிழமை இயங்கிய பிரபல ஜவுளி நிறுவனத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அனைத்து தனியார் நிறுவனங்களும் வியாழக்கிழமை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவருமான மு. கருணாகரன் உத்தரவிட்டார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கியது. இதையடுத்து மாநகராட்சி ஆணையரும், உதவி தேர்தல் அலுவலருமான அர. லெட்சுமி தலைமையில் அதிகாரிகள் மேற்கண்ட கடைக்கு சீல் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.