நெல்லை: 33.6 சதவிகிதம், தென்காசி தொகுதியில் 35.8 சதவிகிதம் வாக்குபதிவு
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 11 மணி நிலவரப்படி 33.6 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 35.8 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.


திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 11 மணி நிலவரப்படி 33.6 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 35.8 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் கல்லிடைக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.21 மணிக்கு 21 வாக்குகள் பதிவாகியிருந்தது. காலையில் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் காத்திருந்து வாக்களித்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 33.6 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 35.8 சதவிகிதமும் பதிவாகி உள்ளது. அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தெற்குபாப்பான்குளம் வாக்குச்சாவடியில் மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியனும், கோபாலசமுத்திரம் பிரான்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ வும் வாக்களித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...