திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

முதல் ஓட்டு: ஆர்வத்துடன் காத்திருந்தோம்

இந்தத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளதால் வாக்களிக்கும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததாக வாக்களித்த கல்லூரி மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

Updated On :24 ஏப்ரல் 2014, 9:36 am

இந்தத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளதால் வாக்களிக்கும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததாக வாக்களித்த கல்லூரி மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் வாக்குரிமையை வழங்கியது. இதன்படி வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவ, மாணவியரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் தங்களது பெயரை பட்டியலில் சேர்த்து வாக்களர் அட்டையைப் பெற்றனர்.

ஏப்.24 ஆம் தேதி மக்களவைககானத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பபட்டதைத் தொடர்ந்து வாக்களிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்ததாக காரைக்குடி சட்டமன்றத் தொகுதி கண்டனூரைச் சேர்ந்த மாணவ,மாணவியர் கார்த்திகா, மற்றொரு கார்த்திகா, பிரவீன்குமார், முத்து ஆகியோர் வாக்களித்த பின்னர் கூறியபோது, முதல் ஓட்டுரிமை என்பதால் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வமும், வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.