நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் சிவகாமி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சிவகங்கையின் மேற்கு பிரகாரத்தில், வடக்கு கோபுரத்தின் அருகாமையில் தனிக்கோயிலாக ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்பணி

News image
Updated On :25 ஏப்ரல் 2014, 1:55 pm

ஜி.சுந்தரராஜன்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தனி்க்கோயிலாக அமைத்துள்ள ஸ்ரீசிவகாமசுந்தர் அம்மன் கோயில் திருப்பணி தொடக்கத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பாலாயம் பூஜை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சிவகங்கையின் மேற்கு பிரகாரத்தில், வடக்கு கோபுரத்தின் அருகாமையில் தனிக்கோயிலாக ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்பணி மேற்கொள்ள வியாழக்கிழமை (24-04-2014)  காலை 10 மணிக்கு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் விமானம் மற்றும் ராஜகோபுர விமானம், ஸ்ரீ சித்ரகுப்தர் விமானம் ஆகியவற்றிற்கு பாலாலயம் பூஜை, பொதுதீட்சிதர்களால் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பந்தக்கால் முஹுர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.