நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தேர்தல் முன்விரோதம், தலித் மக்கள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில்

News image
Updated On :25 ஏப்ரல் 2014, 12:23 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு 7 மணிக்கு மேல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் வடக்குமாங்குடி காலனியைச் சேர்ந்த ராணி (45), பெத்தான் (70), நாகூரான் (60), குருநாதன்(56), பழனி (80), பாப்பா (65) ஆகிய 6 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், மீனா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் தாக்குதல் குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தது: இந்த கொடூரச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட தாக்குதல், இதற்கு துனைபோன அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும். இந்த மோதல் தொடர்பாக சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்களை போலீஸார் கைது செய்யக் கூடாது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி, காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.