ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீஆண்டாள சூடிக்களைந்த வஸ்திரம் அனுப்பும் விழா

ஸ்ரீரங்கம், ஸ்ரீரெங்கநாதர் சித்திரை ரேவதி பிறந்தநாளை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் 9-ம் திருநாளில் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த பட்டு வஸ்திரம், புடவை, கிளி உள்ளிட்வை ரெங்கநாதருக்கு சாற்றப்படுவது

News image
Updated On :25 ஏப்ரல் 2014, 1:33 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீரங்கம், ஸ்ரீரெங்கநாதர் பிறந்தநாளில் சூடுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த வஸ்திரம் உள்ளிடவை அனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஸ்ரீ்ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம், ஸ்ரீரெங்கநாதர் சித்திரை ரேவதி பிறந்தநாளை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் 9-ம் திருநாளில் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த பட்டு வஸ்திரம், புடவை, கிளி உள்ளிட்வை ரெங்கநாதருக்கு சாற்றப்படுவது ஐதீகம்.இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம், புடவை, கிளி உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை சாற்றப்பட்டு ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் இவை மாட வீதிகளின் வழியே வீதி உலா எடுத்து வரப்பட்டது. இவற்றை தனி வாகனத்தில் கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஸ்ரீரெங்கம் எடுத்துச் சென்றார். இவை ஸ்ரீரங்கம் கோயிலில் 8-ம் திருநாளான சனிக்கிழமை காலை ஒப்படைக்கப்படும். பின்னர் ஞாயிற்றுக்கிழமை 9-ம் திருநாளில் தேரில் எழுந்தருளும் ரெங்கநாதருக்கு இவை சாற்றப்படும்.

நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சா.ராமராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.