ஸ்ரீரங்கம், ஸ்ரீரெங்கநாதர் சித்திரை ரேவதி பிறந்தநாளை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் 9-ம் திருநாளில் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த பட்டு வஸ்திரம், புடவை, கிளி உள்ளிட்வை ரெங்கநாதருக்கு சாற்றப்படுவது ஐதீகம்.இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம், புடவை, கிளி உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை சாற்றப்பட்டு ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் இவை மாட வீதிகளின் வழியே வீதி உலா எடுத்து வரப்பட்டது. இவற்றை தனி வாகனத்தில் கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஸ்ரீரெங்கம் எடுத்துச் சென்றார். இவை ஸ்ரீரங்கம் கோயிலில் 8-ம் திருநாளான சனிக்கிழமை காலை ஒப்படைக்கப்படும். பின்னர் ஞாயிற்றுக்கிழமை 9-ம் திருநாளில் தேரில் எழுந்தருளும் ரெங்கநாதருக்கு இவை சாற்றப்படும்.