மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கடிதம்

 மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து விட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்

Updated On :26 ஏப்ரல் 2014, 1:12 pm

 மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து விட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு அவர் சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

16-வது மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இனி வாக்கு எண்ணிக்கை மட்டுமே நடைபெறவுள்ளது. தொகுதி அலுவலகங்கள் செயல்படுவதால் வாக்கு எண்ணிக்கைக்கு எந்த இடர்பாடும் ஏற்படப்போவதில்லை.

ஒரு மக்களவைத் தொகுதியில் பதிவான அனைத்து வாக்குகளும் ஒரு இடத்தில் மட்டுமே எண்ணப்படுகின்றன. உதாரணமாக, சிதம்பரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அரியலூரில் நடைபெறவுள்ளது.

இதற்காக, அரியலூரில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை பூட்டி வைத்திருப்பது அவசியமற்றதாகும். மற்ற தொகுதி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.

எம்.எல்.ஏ. அலுவலகங்கள் தொடர்ந்து பூட்டி இருப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அன்றாடப் பிரச்னைகளை அலுவலகத்துக்குள் வந்து முறையிடவோ, தீர்வு காணவோ முடியவில்லை.

எனவே, எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என தனது கடிதத்தில் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.