குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி பலி

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் நந்தினி(9),  அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  மகன் சந்தோஷ்(6), 1ஆம் வகுப்பு படித்து வந்தார்.
Updated on
1 min read

நெய்வேலி அருகே குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழந்தனர்.  

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் நந்தினி(9),  அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  மகன் சந்தோஷ்(6), 1ஆம் வகுப்பு படித்து வந்தார். நடராஜனின் மனைவி சிவசங்கரி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே தந்தையின் பராமரிப்பில் நந்தினியும், சந்தோசும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை நடராஜன், நந்தினி, சந்தோஷ் ஆகியோர் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள குளத்துக்கு சென்றனர். அந்த குளத்தின் படிக்கட்டில் மகள், மகனை உட்கார வைத்துவிட்டு அருகே உள்ள நிலத்துக்கு நடராஜன் சென்றார். மீண்டும் அவர் திரும்பி வந்தபோது குழந்தைகளை காணவில்லை. இதனால் சந்தேகப்பட்டு நடராஜனும், அப்பகுதி மக்களும் சேர்ந்து குளத்துக்குள் இறங்கி தேடினர். எனினும் நந்தினியையும், சந்தோசையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நீரில் மூழ்கி இறந்த நந்தினி, சந்தோஷ் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டன. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com