தாமிரவருணி நதியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தாமிரவருணி நதிக்கரையில் காணப்படும் செங்கல்சூளை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என


திருநெல்வேலி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தாமிரவருணி நதிக்கரையில் காணப்படும் செங்கல்சூளை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் பிஸ்மிகாஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் முகம்மது லெப்பை, ஹயாத்முகம்மது, வீரை ஜிந்தா, பொருளாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எம். தெகலான்பாகவி, மாநில செயற்குழு உறுப்பினர் ஐ. உஸ்மான்கான், மாநில பொதுச்செயலர் வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் தாமிரவருணி நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். பொதிகை மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, கோதையாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களின் குத்தகையை அரசு ரத்து செய்ய வேண்டும்.மக்களவைத் தேர்தலில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பண விநியோகத்தை கட்டுபடுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான அறிகுறி என்பதை கட்சி சுட்டிக் காட்டுகிறது.தேர்தலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய வாக்காளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
துணைத் தலைவர் சாகுல்ஹமீதுஉஸ்மானி வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலர் ஜாஹீர்உசேன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...