வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்: பாளை. யில் மே 2 ல் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பா. பிராங்பால் ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் நீச்சல்

News image
Updated On :29 ஏப்ரல் 2014, 12:31 pm

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் ஆண்கள், பெண்களுக்கான கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் மே மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 12 தினங்கள் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பா. பிராங்பால் ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் நீச்சல் கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் 12 மணி நேரத்தில் நன்றாக நீந்தும் வகையில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியில் சிறுவர், சிறுமியர் ஆண்கள், பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவ்வாறு முதல் கட்டமாக பயிற்சி பெற்ற 71 பேருக்கு சான்று வழங்கப்பட்டது. இதை அடுத்து அடுத்த கட்டமாக ஆண்கள், பெண்களுக்கான கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வரும் மே 2 ஆம் தேதி தொடங்குகிறது. மே 15 ஆம் தேதி வரை 12 தினங்கள் நடைபெறும் இந்த முகாமில் தினம் 1 மணி நேரம் வீதம் 12 மணி நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமும் காலை 7 முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு பெண் பயிற்சியாளரால் காலை 11 முதல் 12 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. ரூ. 1,000 கட்டணம் செலுத்தி பயிற்சி பெற வேண்டும். பயிற்சி பெறுவோருக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விபரங்கள் அறிய நீச்சல் பயிற்றுநர் பிரேம்குமாரை 94866 30403 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.