தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் என்எல்சி பாதுகாப்பு படைவீரருக்கு கடலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாம் சுரங்க நுழைவு வாயிலில் பாதுகாப்பு வீரராக பணியாற்றியவர், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் நோமன். கடந்த மாதம் 17ஆம் தேதி இவர் பணியில் இருந்தபோது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவர் சுரங்கத்தின் உள்ளே நுழைய முயன்றார்.
அவரை பாதுகாப்பு படை வீரர் நோமன் தடுத்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் நோமன் துப்பாக்கியால் சுட்டதில் ராஜ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது. போலீஸôர் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு படைவீரர் நோமனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நோமன் ஜாமீன்கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் கிடைக்காததால் நோமன் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த கட்டமாக அவர் ஜாமீன்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

