/

அதிவேக லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

பழனி அருகே அதிவேகமாக சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.பழனியை அடுத்த பெரியம்மாபட்டி, கரிக்காரன்புதூர், பெருமாள்புதூர் போன்ற

News image
Updated On :30 ஏப்ரல் 2014, 12:41 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே அதிவேகமாக சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

பழனியை அடுத்த பெரியம்மாபட்டி, கரிக்காரன்புதூர், பெருமாள்புதூர் போன்ற கிராமங்கள் மண்வளம் நிறைந்த பகுதிகளாகும்.  இதனால் இங்கு நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள், செங்கல் சேம்பர்கள் உள்ளன.  இந்நிலையில் இங்கிருந்து பட்டாநிலங்களில் வண்டல்மண் விலைக்கு பெறப்பட்டு வெளியூரில் உள்ள செங்கல் சூளைகளுக்கும், கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.  இந்நிலையில் பெரியம்மாபட்டியில் இருந்து சின்னக்காந்திபுரம் வழியாக நெய்க்காரபட்டி பிரதான சாலைக்கு நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் செல்வதால் சாலைகள் மிகவும் சேதமடைந்து வந்தது.  மேலும், லாரிகள் அதிவேகமாக வருவதாலும், சாலை நெடுக மண் சிந்தி செல்வதாலும் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் விவசாயிகள் என பலரும் இதனால் பெரும் தொந்தரவுக்கு ஆளாகினர்.  இதுகுறித்து வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத நிலை நீடித்ததால் புதன்கிழமை அதிகாலையில் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை சின்னக்காந்திபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.  லாரிகளை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து மறித்து நின்றதால் 20க்கும் மேற்பட்ட லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தது. சம்பவ இடத்துக்கு நீண்ட நேரமாகியும் போலீஸாரோ, வருவாய்துறையினரோ வராத நிலையில் பொதுமக்களும், லாரி ஓட்டுனர்களுமே பேசி சமாதானமடைந்தனர்.  இதைத் தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கைவிட லாரிகள் கிளம்பி சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.