சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் பஸ்நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

சிதம்பரம் பஸ்நிலைய கடைகளில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு, விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான பொருள்களை கீழே கொட்டி அழித்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2014, 9:36 am

சிதம்பரம் பஸ்நிலைய கடைகளில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு, விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான பொருள்களை கீழே கொட்டி அழித்தார்.

சிதம்பரம் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற உணவு பொருள்களும், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா, வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பத்மநாபன் (சிதம்பரம்), குணசேகரன் (புவனகிரி) ஆகியோர் சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் காலாவதியான பெப்சி மற்றும் குளிர்பானங்கள், சிப்ஸ், கலர்பொடியால் கலப்படம் செய்யப்பட்ட இனிப்புகள், புரூட்மிக்சர் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். மேலும் கலர்பொடியை பயன்படுத்தக்கூடாது, திறந்தவெளியில் தின்பண்டங்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.