தமிழகத்தில் வறட்சியை அங்கீகரித்து விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து அவர் விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,
சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் போதிய மழையில்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டுள்ளளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் நிவாரணம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு பேசியுள்ளார். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் மாநிலத்தில் எங்கும் வறட்சியில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வறட்சியில்லை என்று அமைச்சர் தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வடமேற்கு பருவமழை, தென்மேற்கு பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியாக இருக்கிறது. இதனால், விவசாய சாகுபடியும் குறைந்துள்ளது. மேலும், பயிர் சாகுபடி பாதிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதனால், எந்தெந்த பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மாநில அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதையடுத்து, வறட்சியை அங்கிகரித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், மாநில அரசு கரும்புக்கு விலை உயர்த்தி நிர்ணயம் செய்தது. அதை கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை முழுவதையும் வழங்கியுள்ளது. அதேபோல், தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.475 கோடியை உடனே வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்காக புதிதாக தொடங்கப்பட்ட 34 உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இவை அனைத்தையும் அரசு கல்லூரிகளாக அறிவித்து, மாநில அரசின் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். இதேபோல், ஈரோட்டில் செயல்பட்டு வரும் கிச்சநாயக்கன் கல்லூரியையும், அரசு கல்லூரியாக அறிவித்து ஏற்று நடத்த வேண்டும்.
ஐ.ஏ.எஸ் மற்றும் இந்தியன் குடியுரிமை பணிக்கான தேர்வுக்கு வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழியிலேயே இருக்கிறது. இதை தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்குவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சியின் காரணமாக காய்கறி விலை அதிகரித்து வருகிறது. அதனால் அனைவருக்கும் எளிதாக வாங்கும் வகையில் அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கும்பகோணம் பள்ளி தீ விபத்து குறித்த வழக்கில் 10 பேருக்கு தண்டனை என்றும், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே பள்ளி சட்டவிதிமுறைகளை அமுல்படுத்தாத அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அதனால் தமிழக அரசு இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இல்லை. அதனால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதில், தேசிய குற்றப்பிரிவு அமைப்பு கொடுத்த தகவலின் அடிப்படையில், 2010ல் 7 லட்சத்து ஆயிரத்து 66 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 2011ல் 7 லட்சத்து 19 ஆயிரத்து 87 குற்ற வழக்குகளும், 2012ல் 7 லட்சத்து 49 ஆயிரத்து 538 குற்ற வழக்குகளும் என அதிகரித்துக் கொண்டே வருவதால் சட்டம் ஒழுங்கில் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பொதுவாக தென்மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதேபோல், கௌரவக் கொலைச் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதை தடுப்பதற்கு கௌரவ கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். அப்போது உடன் மாநில குழு
உறுப்பினர் என்.பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் சேகர் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


