சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 20) சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
மேற்கு ஆசிய போர் காரணமாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்க்கு பதிலாக, மீண்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.
இதனால், தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த ஏப். 14, 15, 16 ஆகிய 3 நாள்களிலும் மொத்தம் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்தது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை ரூ.1,200 குறைந்தது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,14,400-க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 280-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலிலும், அக்ஷய திருதியை நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள முக்கிய நகைக்கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் நகை வாங்கிச் சென்றனர்.
Summary
In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 480 per sovereign today (April 20).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

