விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 2015-ம் ஆம் ஆண்டிற்குள் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் நிர்மல் பாரத் அபியான் திட்டமும் இணைந்து 1 லட்சத்து 54 ஆயிரத்து 449 தனிநபர் கழிப்பறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இம்மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, திறந்தவெளியை மலம் கழிக்கப் பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் உண்டாகும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்ககளை பாதுகாக்கும் விதமாகவும், சுகாதாரமான முறையை கையாளும் வகையிலும் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கும் வகையில் கிராமங்களில் தனிநபர் கழிப்பறை உருவாக்கும் திட்டத்தை அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது.
இம்மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, கல்வித்துறை, சுகாதாரத் துறை, மகளிர் திட்டம், கால்நடைத்துறை, பொதுவிநியோக திட்டம், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், புதுவாழ்வு திட்டம் ஆகியவைககளின் அலுவலர்கள் மூலம் தனிநபர் கழிப்பறைகள் இல்லாத வீடுகளை கண்டறிந்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு, பொதுமக்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்களை பெற்று, அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர்களிடம் அளித்து தனிநபர் கழிப்பறை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் 3 ஊராட்சிகளை தேர்வு செய்து, அந்தந்த ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையுடன், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்குவதோடு, பணிபதிவேட்டிலும் பதிவு செய்யப்பட இருக்கிறது. ஒரு தனி நபர் கழிப்பறை அமைக்க ரூ.11,100 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.10200 மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூ.800 பயனாளியின் பங்களிப்பாகும். எனவே அரசு தரும் மானியத்தை பொதுமக்கள் பெற்று தனி நபர் கழிப்பறைகள் அமைத்து, திறந்த வெளிக் கழிப்பிடங்களே இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் மா.பிரபாகர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பீபிஜான், உதவி திட்ட அலுவலர் பழனி, மாவட்ட சுகாதார வளாக ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.மணி, துணை அலுவலர் சேகர், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் 450 ஊராட்சிகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


