விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளியின் வீட்டை திறந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் அருகே அரசகுடும்பன்பட்டியைச் சேர்ந்த கடற்கரை என்பவரின் மகன் கோவிந்தராஜ்(38). இவர் வியாழக்கிழமை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு, பின் வீட்டை பூட்டி சாவியை மின்மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு கணவனும், மனைவியும் அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றனர். அதையடுத்து, வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, வீடு திறந்து கிடந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ளே சென்று பார்க்கையில் பீரோவையும் உடைத்து 1 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4500-ம் மர்ம நபர்கள் திருடிச்
சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வீட்டை திறந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

