விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை: உயர்ந்து வரும் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2014, 7:43 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி கடனாநதி அணையில் 2 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 17 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 3114.24 கனஅடியாக அதிகரித்ததை அடுத்து  அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 59.40 அடியாக இருந்தது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 75.62 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.58 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 63.00 அடியாகவும் இருந்தது.
கடனாநதி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 204 கனஅடியாக அதிகரித்து நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 61.50 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 54 கனஅடியாக அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 89.00 அடியாக இருந்தது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 33.05 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும்
இருந்தது.
பாசனம், குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 1105 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 75 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தலா 10 கனஅடியும், குண்டாறு அணையில் இருந்து விநாடிக்கு 9 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.