மேலும், பிடிபட்ட நபர்களின் தகவலின் பேரில் திருட்டுக்கு உதவியாக இருந்த புதுஆயக்குடியை சேர்ந்த காமாட்சி மகன் கருப்புச்சாமி(35), பழைய ஆயக்குடி பெரும்பாறை காலனியை சேர்ந்த சிவசுப்பிரமணி மகன் முத்துக்கிருஷ்ணன்(23), ரமேஷ் மகன் பொன்ராஜ்(18), தாமோதரன் மகன் செல்வராஜ்(38) ஆகியோரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள வேலிக்கற்கள், தேக்குமரத்துண்டுகள், பேட்டரிகள், சோலார் சார்ஜர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சனிக்கிழமை இரவு ஆயக்குடி காவல் நிலையத்தை ஏராளமான விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.