குன்னம் அருகே பள்ளி மாணவி பலாத்காரம்: கட்டட தொழிலாளி கைது
குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமம், கிழக்குத் தெருவை சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அங்குள்ள பால்


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை மாலை பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கட்டடத் தொழிலாளியை, குன்னம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமம், கிழக்குத் தெருவை சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அங்குள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் கட்டடத் தொழிலாளியான தேவேந்திரன் (26), அந்த மாணவியை தூக்கிச்சென்று அப்பகுதியில் உள்ள கரும்பு காட்டில் பலாத்காரம் செய்துவிட்டாராம்.
இதுகுறித்து, அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் வழக்குப் பதிந்து, தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...